பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயினமாணவிகள் 84.6% தேர்ச்சி-மாணவர்கள் 77.4%
சென்னை:பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் 81 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடந்தன. 6,02,258 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.
மதிப்பெண்களைப் பட்டியலிடும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை முடிவுகள் வெளியாயின.
இதில் மாணவிகள் 84.6 சதவீதமும், மாணவர்கள் 77.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில் 1,568 பேரும், இயற்பியலில் 217 பேரும், வேதியியலில் 145 பேரும், உயிரியலில் 81 பேரும், தாவரவியலில் 55 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 72.9 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 81 சதவீதமாகியுள்ளது.
தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்கள்
கரூர் சேரன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் மாதவன் தமிழில் 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1,158
2வது இடம் பிடித்தது ஹரீஸ் (மொத்த மதிப்பெண் 1,139). தமிழில் 196. இவர் பொன்னேரி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்.
3வது அபிதா (மொத்த மதிப்பெண் 1,109). தமிழில் 196, மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
ஆங்கிலம்
முதலாவதாக சுஜானா கேத்ரி (மொத்த மதிப்பெண் 1,145). ஆங்கிலத்தில் 195, ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்.
2வது ரம்யா (மொத்த மதிப்பெண் 1,182). ஆங்கிலத்தில் 194, டிஏவி மேல்நிலைப்பள்ளி, சென்னை
3வது நிவேதிதா (மொத்த மதிப்பெண் 1,179). ஆங்கிலத்தில் 194, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி,நாமக்கல் மற்றும் கீர்த்தனா (மொத்த மதிப்பெண் 1,179) எஸ்ஆர்வி மேல்நிலைப்பள்ளி நாமக்கல்.
கணக்கு
முதலாவதாக தசீன் நிலோபர். கணிதத்தில் 200, எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல். இவர் ெமாத்த மதிப்பெண் அதிகம் எடுத்ததால் கணக்கில் முதல் மாணவியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2வது இடம் பிடித்தவர் பிரவீன்குமார்( மொத்த மதிப்பெண் 1,180). கணிதத்தில் 200, எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
3வது அரவிந்த் (மொத்த மதிப்பெண் 1,177). கணிதத்தில் 200, பிவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு மற்றும் நித்யானந்தன் (மொத்தம் 1,177) கணிதத்தில் 200, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
இயற்பியல் மற்றும் வேதியியல்
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் முதலிடத்தை தசீன் நிலோபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நாமக்கல் பிடித்துள்ளார். இவர் இரண்டிலும் 200க்கு 200 வாங்கியுள்ளார்.
2வது இடத்தை பிரவீன்குமார் ( மொத்தம் 1,180) பிடித்துள்ளார். இவரும் இரண்டு பாடங்களிலும் 200 வாங்கியுள்ளார். இவர் படித்தது எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
3வது இடம் அரவிந்த் (மொத்தம் 1,177) இரு பாடங்களிலும் 200. பிவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
மற்றும் நித்யானந்தன் (மொத்தம் 1,177) இரு பாடங்களிலும் 200. குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
உயிரியல்
முதலாவதாக தசீன் நிலோபர் 200, எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நாமக்கல்.
2வதாக பிரவீன்குமார் (மொத்தம் 1180). உயிரியலில் 200, எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
3வதாக நித்யானந்தன்(மொத்தம் 1,177) உயிரியலில் 200, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
தாவரவியல்
முதலாவது இடத்தை மீனா (200 மதிப்பெண்கள்), அவிலா மேல்நிலைப்பள்ளி, கோவை
2வது இடத்தை பாகீரதி (200), ஜவகர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்
3வது இடத்தை சுமையா பாத்திமா (200), யுஎச்ஓ மேல்நிலைப்பள்ளி, கரூர் ஆகியோர் பிடித்துள்ளனர்.
விலங்கியல்
முதலாவது இடம் மீனா (மதிப்பெண் 200), அவிலா மேல்நிலைப்பள்ளி, கோவை
2வது இடம் ஜெபமலர் (199) சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்
கணினி அறிவியல்
முதலாவது இடம் செந்தில்குமரன் 197, கேன்ஸ் மெட்ரிக் பள்ளி, சேரன்மகாதேவி
2வது இடம் ஜெகதீஷ் 197, எஸ்எஸ் வித்யாலயா, சென்னை
3வது சுதர்சனன் 197, டிஏவி மேல்நிலைப்பள்ளி, சென்னை
இந்தி
முதலாவது தனுஸ்ரீ 197, பிவி மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.
2வது இடம் ஷியாம்பாபு 197, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, சென்னை
3வது இடம் பொன் ஆர்த்தி 196, பிவிபி மெட்ரிக் ஈரோடு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications