ராதிகாவுக்கு உள்துறையா?-தயங்கிய காங்கிரஸ்!
டெல்லி:ராதிகா செல்விக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் கட்சி மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இருப்பினும் திமுக வலியுறுத்தியதால், அத்துறையை ராதிகாவுக்குத் தர முன் வந்ததாம்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், குறைந்த ஒரு இடத்திற்கு ராதிகா செல்வியை திமுக காங்கிரஸ் தலைமைக்குப் பரிந்துரைத்தது.
ராஜாவுக்கு, தயாநிதி மாறனின் தகவல் தொழில்நுட்பத் துறையையும், ரகுபதிக்கு வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பை ஒதுக்குமாறும், உள்துறை இணை அமைச்சராக ராதிகா செல்வியை நியமிக்குமாறும் திமுக பரிந்துரைத்தது.
இதில் ராஜா, ரகுபதி குறித்து காங்கிரஸுக்கு எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. ஆனால் ராதிகா செல்வி விவகாரத்தில்தான் காங்கிரஸ் தலைமை அதிகம் தயங்கியதாம்.
ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேச பண்ணையார் ஒரு தாதா. அவர் மீது கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில், பண்ணையார் என்கவுண்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் ராதிகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் கொடுக்க காங்கிரஸ் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரத்குமாரை நெருக்கடியில் ஆழ்த்தவும், நாடார் சமுதாயத்தினரை தக்க வைத்துக் கொள்ளவும், ராதிகா செல்வியை (பிடிக்கிறதோ, இல்லையோ) அமைச்சராக்கியே தீர வேண்டிய நிலையில் திமுக இருந்தது.
இதன் காரணமாக ராதிகா செல்விக்கு கண்டிப்பாக இத்துறையைத் தந்தே ஆக வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். இதையடுத்தே அவருக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க முடிவு செய்ததாம் காங்கிரஸ்.
ராதிகா செல்வி பி.ஏ வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் படித்தது பிளஸ்டூ என்கிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சங்கரலிங்க நாடார் பள்ளியில்தான் பிளஸ்டூ படித்துள்ளார் ராதிகா செல்வி. அதன் பிறகு அவர் எங்கு போய் பி.ஏ படித்தார் என்று தெரியவில்லை.
ராதிகா செல்விக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது. இருப்பினும் அவருக்கு இந்தி நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சி 3 நிமிடங்களில் முடிவடைந்தது. பதவியேற்ற பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், ராதிகா செல்வியை இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு ராதிகா செல்வி ஒரு கையால் விஷ் செய்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இரு கைகளால் வணங்கினார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வெள்ளை வெள்ளையாய் மிதந்து வந்து.. திருச்செந்தூர் கடலில் ஷாக்! பதறிப் போன பக்தர்கள்! என்னாச்சு? -
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி












Click it and Unblock the Notifications