வைகுண்டராஜன் நிறுவனத்தில் திடீர் ரெய்டு
திருநெல்வேலி:ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரராக கூறப்படும் தொழிலதிபர் வைகுண்டராஜனின் இருப்பிடங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் வைகுண்டராஜன். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் உள்ள தாது மணலை எடுத்து வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயா டிவியின் முக்கிய பங்குதாரராகவும் இவர் உள்ளார். இதன் காரணமாக வைகுண்டராஜனை பழிவாங்கும் நோக்கிலும், அவரிடம் உள்ள ஜெயா டிவியின் பங்குகளை பறித்து ஜெயா டிவியை முடக்கும் நோக்கிலும் வைகுண்டராஜன் மீது குண்டர் சட்டம், ரெய்டு உள்ளிட்டவற்றை ஏவி விடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் வைகுண்டராஜனின் தாது மணல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிட்டங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வைகுண்டராஜனின் தம்பி சுகுமாரன் வைத்துள்ள நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடந்தபோது வைகுண்டராஜன் அங்கு இல்லை. அவர் சென்னையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications