இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார்.
இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது.
இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications