கார்களில் சீட் பெல்ட் கட்டாயம்:தரமான ஹெல்மெட் வாங்க கால அவகாசம்
சென்னை: ஆட்டோ டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய தேவையில்லை என்றும், தரமான ஹெல்மெட் வாங்குவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் சுனில்குமார் கூறியுள்ளார்.
சென்னை போன்ற மாநகராட்சிகளில் கட்டாய ஹெல்மெட் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னையில் கூடுதல் கமிஷ்னர் சுனில்குமார் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் சிலர் ஐஎஸ்ஐ ஹெல்மெட் தட்டுபாடு உள்ளதால் வாங்க முடியவில்லை என்று கூறினர். இதனால் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டது.
இதனால் ஹெல்மெட் அணியாதவர்கள் போலீஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து சுனில்குமார் கூறுகையில்,
சோதனையில் ஹெல்மெட் அணியாத 1,500 பேர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அபராதம் செலுத்தியவர்கள் மிக குறைவு. கட்டாய ஹெல்மெட் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தரமான ஹெல்மெட் வாங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு கால நிர்ணயம் எதையும் தெரிவிக்க முடியாது.
பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகன ஓட்டி வருபவரிடமிருந்து தான் அபராதம் வசூலிக்கப்படும்.
இதேபோல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அணியாதவர்களிடமிருந்தும் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காரின் வேகத்தை விட ஆட்டோ வேகம் குறைவுதான் என்பது காரணம் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications