இனி ஓய்வு நாளில் சஸ்பெண்ட் கிடையாது!
சென்னை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படும் முறையை ரத்து செய்து தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் ஓய்வு பெறும் நாளின்போது சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.
இதனால் ஏற்படும் பல பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், இந்த முறையை ரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சமாதிகள், பிருந்தாவனம் போன்றவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க 2003க்கு முன்பிருந்த நிலையைக் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக இந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications