கையை வெட்டி முன்னாள் கிரிக்கெட்வீரர் மணீந்தர் சிங் தற்கொலைக்கு முயற்சி
டெல்லி:போதைப் பொருள் வைத்திருந்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தனது கையின் மணிக்கட்டை துண்டித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். டெல்லி மருத்துவமனையில் மணீந்தர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![]() |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் மணீந்தர் சிங். மே 23ம் தேதி தடை செய்யப்பட்ட கொகைன் போதைப் பொருளை வைத்திருந்ததாக மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன் நண்பர் சியாம் சித்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் மணீந்தர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மணீந்தர் சிங்கின் வீடு டெல்லி, ப்ரீத் விகார் பகுதியில் உள்ள மோசம் விகாரில் உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1மணிக்கு டெல்லி போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. மணீந்தர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் தெரிவித்தது.
இதையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். இரு கை மணிக்கட்டுக்களும் வெட்டுப்பட்ட நிலையில் மணீந்தர் சிங்கை, அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சாந்திமுகுந்த் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
மணீந்தர் சிங் தற்கொலைக்கு முயன்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவர் ஆபரேஷன் தியேட்டரில்தான் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications