கொலையில் முடிந்த பேனா தகராறு:மாணவன் சாவு-சக மாணவன் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூரில் பேனாவை எடுத்த சக மாணவனைப் பிடித்து வேகமாக தள்ளி விட்டதில் அந்த மாணவன் பரிதாபமாக இறந்தான். பிடித்துத் தள்ளி விட்ட மாணவன் கைது செய்யப்பட்டான்.
மேட்டூர் திருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். 14 வயதாகும் இவரது மகன் மகேந்திரன் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பள்ளியில் வினோத் என்பவனும் படித்து வந்தான். 2 நாட்ளுக்கு முன்பு வினோத்தின் பேனா தொலைந்து போனது. இதுதொடர்பாக மகேந்திரனுடன் சண்டை போட்டுள்ளான் வினோத்.
அப்போது மகேந்திரனைப் பிடித்து வேகமாக கீழே தள்ளியுள்ளான் வினோத். இதில், சுவரில் போய் மோதிய மகேந்திரன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதனால் பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து வினோத்தைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications