மதுரைக்காக நிதி திரட்டும் நெல்லை தேமுதிக
திருநெல்வேலி:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நெல்லை தேமுதிகவினர், கட்சிக்குள்ளேயே தீவிர நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மேற்குத் தொகுதியில், தேமுதிக போட்டியிடுகிறது. இக்கட்சி சார்பில் சிவமுத்துக்குமரன் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும் நிதி பலம், தொண்டர் பலத்துடன் களம் கண்டுள்ள நிலையில், தேமுதிக மக்களை நம்பி மட்டுமே களம் இறங்கியுள்ளது.
இருந்தாலும் கூட வெற்றியை இலக்காகக் கொண்டு அக்கட்சியினர் படு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை தேமுதிகவினருக்கு உதவியாக நெல்லை தேமுதிகவினரும் களம் குதித்துள்ளனர்.
இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நெல்லை தேமுதிகவினர் நிதி சேகரிப்பில் இறங்கியுள்ளனராம். கட்சி நிர்வாகிகளிடமே வசூல் நடத்தி அந்தப் பணத்தைக் கொண்டு சுவரொட்டிகள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யாமல், தங்களு கட்சியினரிடமே நிதி வசூலில் ஈடுபட்டிருக்கும் தேமுதிகவினரின் போக்கு பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாது, மதுரை மேற்குத் தொகுதி பிரசாரத்திலும் நெல்லை தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர். 150 வாக்காளர்களுக்கு ஒரு தொண்டர் வீதம் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு அசத்துகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications