மதுரை தேர்தல் பணியில் திருச்சி அதிகாரிகள்
மதுரை:மதுரை இடைத் தேர்தலில் மதுரை மாவட்ட அதிகாரிகளை தேர்தல் பணியில் நியமிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதற்குப் பதிலாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர், தேர்தல் அதிகாரி, நூற்றுக்கணக்கான ஏட்டுக்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு மாற்றி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் மதுரை மேற்குத் தொகுதியில் மத்திய அரசு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டது. அதேசமயம், இவர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க கூடாது எனவும் தடை விதித்தது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications