மதுரையில் ஜெ-வைகோ நாளை பிரச்சாரம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நாளை கூட்டாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகின்றனர்.
26ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள இத் தொகுதியில் அதிமுக,காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களத்திலுள்ளனர்.
அதிமுக வேட்பாளரான செல்லூர் ராஜூவை ஆதரித்து நாளை ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். அவருடன் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
நாளை காலை விமானம் மூலம் மதுரை செல்லும் ஜெயலலிதா, அழகர்கோவில் சாலையிலுள்ள சங்கம் ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் மேற்கு தொகுதி தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
மாலை செல்லூர் 60 அடி சாலையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு கடைசி நாளான 24ம் தேதி மீண்டும் மதுரை செல்லும் ஜெயலலிதா, செல்லூர் ராஜூவை ஆதரித்து வீதி வீதியாக பிரசாரம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications