மண வீட்டார் சென்ற லாரி விபத்தில்சிக்கி 3 பேர் பலி; மணமகள் படுகாயம்
சென்னை:
சென்னை அருகே நடந்த கோர விபத்தில் திருமண வீட்டைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். மணமகள் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இன்று காலை விழுப்புரம் அருகே கல்யாணம் நடப்பதாக இருந்தது.
இதற்காக மணமகள் வீட்டார் மினி லாரி ஒன்றில் விழுப்புரம் கிளம்பினர். நேற்று இரவு அவர்கள் சென்ற மினி லாரி, அச்சரப்பாக்கம் அருகே தொழுபேடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது.
இதில் மினி லாரி சுக்கு நூறாக நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி மணமகள் வீட்டார் துடித்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பக்கமாக சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் காரை நிறுத்தி விட்டு மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
விபத்தில் தனலட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணமகள் சங்கீதாவின் சகோதரி மாலா என்பவரும் மினி லாரி டிரைவர் ராஜேந்திரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.
விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications