பாபா தந்த அருள் வாக்கு: பிரதீபா நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றபோது எனக்கு பாபா (பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிறுவனத் தலைவரான மறைந்த லெக்ராஜ்), ஆவி உருவில் வந்து அருள் வாக்கு கொடுத்தார். அதனால்தான் எனக்கு குடியரசுத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு வந்துள்ளதாக பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் , தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவோம் என்று முன்பே அருள்வாக்கு மூலம் தெரிந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பாட்டீல் கூறுகையில், மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை(அவர்தான் அமைப்பின் தலைவர்) சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார்.

அப்போது பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு எனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது என்றும் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+