ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் தீவிரவாததாக்குதல்: இங்கிலாந்தில் பெரும் பதட்டம்
லண்டன்:
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தில் தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஒரு கார் படு வேகமாக வந்தது. அந்தக் காரை பாதுகாவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் பாதுகாவலை மீறிக் கொண்டு அந்தக் கார் படு வேகமாக நுழைவாயிலை நோக்கி விரைந்தது.
வந்த வேகத்தில் நுழைவாயில் சுவற்றில் மோதி நின்றது. அடுத்த விநாடியே கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தக் காரைச் சுற்றிலும் போலீஸார் குவிந்தனர். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேயற்றப்பட்டனர்.
தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து குதித்த இருவரும் உயிர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தெற்காசியர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
நேற்று முன் தினம் தான் லண்டனில் குண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
இந் நிலையில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் கார் குண்டு மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் குறித்து லண்டன் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், கிளாஸ்கோ தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன. இது தீவிரவாத தாக்குதல் என்று கூற முடியும்.
விமான நிலையத்தில் மோதியவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட்டாகவும் இருக்கலாம். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர். பின்னர் உடலிலிருந்து அந்தக் கருவி எடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றார்.
இதற்கிடையே செஷையர் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் இருவரும் வந்த காரை மடக்கி இருவரையும் கைது செய்தனர்.
இருப்பினும் இந்தக் கைது குறித்த முழு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை.
இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் தீவிர பாதுகாப்பு:
இந் நிலையில் அமெரிக்காவிலும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், சிகாகோ, நியூயார்க் ஆகிய விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications