விசா இல்லாமல் அமெரிக்க வீரர்களை உள்ளே விட்டது யார்?-பாஜக. கேள்வி
சென்னை:நிமிட்ஸ் கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையினரை விசா கூட இல்லாமல் இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
![]() |
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமெரிக்காவுக்கு ஒருவர் செல்ல வேண்டுமானால் அவர்கள் எந்த அளவுக்கு விசா கெடுபிடிகளை செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நிமிட்ஸ் கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ள அமெரிக்க வீரர்களுக்கு எந்தவித விசாவும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடும் அனுமதியைக் கொடுத்தது யார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இங்குள்ள ஆளும் கட்சியும் இதைத் தடுக்க முயலவில்லை.
ஆனால் அமெரிக்க வீரர்களைக் குஷிப்படுத்த இந்த அரசு என்னென்னமோ செய்து கொடுத்துள்ளது. குப்பையை எடுக்கிறோம் என்று எய்ட்ஸை கொடுக்காமல் போனால் சரி.
![]() |
ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வரும் காலங்களில் எங்களுக்கு அதிமுக-வின் ஆதரவு தேவைப்படுகின்றது. மேலும் ஆளும் கட்சியாக இருந்தால் விமர்சனம் செய்யலாம், எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வது முறையல்ல. இது ஆரோக்கியமான அரசியல் ஆகாது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இருந்தாலும், அங்கு நடக்கும் அனைத்து அக்கிரமங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன்.
அதேபோல, தனது கட்சியினரை குடியரசுத் தலைவர் தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
திமுக, மத்தியில் பாஜக-வுடன் கூட்டணி வைத்த காலத்தில் பாஜக அரசை எதிர்த்து இது போன்று போராட்டங்களை நடத்தியது. ஆனால் இப்போது பாமக இதை செய்யும்போது, கூட்டணியில் இருந்து கொண்டு ஆளும் அரசை விமர்சனம் செய்வது சரியல்ல என்கிறார் முதல்வர் கருணாநிதி.
மதுரை இடைத் தேர்தலில் எங்கள் கட்சி அடைந்த தோல்வியை ஒத்துக் கொள்கிறோம். கட்சியில் புதுத் திட்டம் கொண்டு வரப்படும் என்றார் கணேசன்.














Click it and Unblock the Notifications