இந்தோனேஷியா-எரிமலை வாயுவால் 6 மாணவர்கள் பலி
ஜகார்தா:ஜகார்தா அருகே உள்ள எரிமலையிலிருந்து வெளியான விஷ வாயுவால் 6 பள்ளிக் குழந்தைகள் பலியாயினர்.
உலகிலேயே அதிக எரிமலைகளை கொண்ட நாடு இந்தோனேஷியா. ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் உலகில் எரிமலைகள் நிறைந்த நாடுகளின் வட்டத்தில் அமைந்துள்ளது இந்தோனேஷியா. எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் நிறைந்த நாடு இது.
ஜகார்தாவிற்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சலக் மலையில் ஒரு எரிமலை உள்ளது.
இந்த எரிமலைக்கு கேம்ப் செல்வதும், எரிமலையின் முகப்பு வரை செல்வதும் இப் பகுதி மக்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது.
இந்நிலையில் 20 பள்ளிக் கூடங்களிலிருந்து மாணவர்கள் மலையேற்றத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்திருந்தனர். இதிலிருந்து 6 மாணவர்கள் எரிமலையின் புகை பரவியிருந்த உச்சிக்குச் சென்றனர்.
அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உடனிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மாணவனின் வாயிலிருந்து புகை வந்தவண்ணம் இருந்தது. அவனுடன் சென்றவர்களும் மயங்கிய நிலையில் இருந்தனர்.
எரிமலையில் இருந்து வெளியான சல்பர் வாயுவை இவர்கள் சுவாசித்துள்ளனர். இதில் ஒருவர் பலியாகிவிட மயங்கிக் கிடந்து மற்ற 5 மாணவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மலைப் பாதையில் அவர்களை கீழே இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நெடு நேரம் பிடித்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் பலியாகிவிட்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications