அதிமுகவுடன் கூட்டணியா?: கனவில் கூடநினைக்க மாட்டோம்- ஜி.கே.மணி
சென்னை:அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாமகவினர் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சென்னை அருகே மறைமலைநகரில் பாமக இளைஞர் சங்க சீருடை அணிவகுப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ஜி.கே.மணி வந்தார்.
அப்போது அவரிடம் பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வந்தால் கெளரவமாக நடத்தப்படுவார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு ஜி.கே.மணி பதிலளிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு பதிலைத் தந்துள்ளார். ஆனால் அந்த செய்தி நடக்கும் என்று கனவில் கூட பாமகவினர் நினைத்துப் பார்க்க மாட்டார்கள், பார்க்கவும் கூடாது.
திமுக கூட்டணியில் பாமக நீடிக்கும், திமுக அரசுக்கு முழு ஆதரவு தரும் என்று எங்களது தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இது உறுதி.
கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவு சரியாக இருந்தாலும், குற்றச் செயல்களைத் தடுக்க போலீஸார் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார் மணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications