சென்னை ஈ.சி.ஆர். சாலையில் கார்-பஸ்-லாரிஅடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி
மாமல்லபுரம்:சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் ஈ.சி.ஆர். சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.
சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு சென்ற மினி லாரி பட்டிபுலம் என்ற இடத்தில் ரோட்டோரமாக நின்றிருந்தது. அப்போது புதுச்சேரிக்கு சென்ற இன்னொரு லாரியின் டிரைவர் அந்த மினி லாரி நின்றிருப்பதை கவனிக்காமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
மினி லாரியின் அருகே சென்றபோது தான் அது நின்றிருப்பதை உணர்ந்தார். இதையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க லாரியை திடீரென திருப்பினார்.
அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த வேகமாக வந்த கார் டிரைவர், திடீரென மினி லாரியின் பின்னால் இருந்து லாரி வருவதைக் கண்டு அதிர்ந்தார்.
அவர் காரை கட்டுப்படுத்துவதற்குள் லாரி வேகமாக வந்து கார் மீது மோதியது. இருவருமே படு வேகத்தில் ஓட்டியதால் லாரியில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு பறந்தது.
அப்போது சென்னையிலிருந்து நாகபட்டினம் சென்ற பஸ் படு வேகத்தில், லாரியின் பின் பக்கமமாக வந்து மோதியது.
இந்த தொடர் விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். லாரியில் மோதிய பஸ்ஸின் டிரைவர் அதே இடத்திலேயே இறந்துவிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் விபரம்:
பஸ் டிரைவர் கோவிந்தராஜ் மற்றும் காரில் வந்த தி.நகரை சேர்ந்த சந்திரமவுலி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர்.
பார்க்கிங் லைட் கூட போடாமல், பொறுப்பில்லாமல் மினி லாரியை ரோட்டில் நிறுத்தியதால் நேர்ந்த கொடுமை இது. ஈசிஆர் ரோட்டில் விபத்துகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications