தென்காசி-செங்கோட்டை அகல ரயில் பாதை பணி முடிந்தது
திருநெல்வேலி:தென்காசி-செங்கோட்டை அகல ரயில் பாதை பணி முடிந்து ரயில் எஞ்சின் வெள்ளோட்டம் விடப்பட்டது.
தென்காசி முதல் செங்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் எஞ்சின் வெள்ளோட்டம் விடப்பட்டது.
செங்கோட்டையில் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சினுக்கு பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்து உதவி பொறியாளர் எத்திராஜ் கூறுகையில்,
தென்காசி முதல் செங்கோட்டை வரையிலான அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது எஞ்சின் மூலம் வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது. இன்று முதல் புதிய பாதையில் உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை சரி செய்யும் பேக்கேஜ் இஞ்சின் இயக்கப்படவுள்ளது.
இந்த வார இறுதிக்குள் பெங்களூரிலிருந்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஆய்வு நடத்தவிருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications
