நண்பனின் சகோதரியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
சென்னை:நண்பனின் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த முயன்ற வாலிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லியையடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (14)(பெயர் மாற்றபட்டுள்ளது). இவருடைய அண்ணன் சினிமா சிடிக்கள் வாடகைக்கு விடும் பிசினஸ் செய்து வருகிறார். இவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி.
இந் நிலையில் அண்ணன் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, சிடி வாங்க வந்ததாகச் சொல்லி உள்ளே நுழைந்துள்ளார்.
சிடியை எடுத்துக் கொடுக்க வீட்டுக்குள் சென்றார் பிரியங்கா. அப்போது வீட்டின் கதவை தாழ்பாள் போட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் போன கிருஷ்ணமூர்த்தி அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால் பிரியங்கா அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார்.
தனது அண்ணனுக்கு போன் செய்து அவர் தகவலைக் கூறவே , அவர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவரது பெற்றோரும், உறவினர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு பிரியங்காவின் அண்ணனை அடித்து விரட்டினர்.
இதையடுத்து தன் தங்கையுடன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications