ஜெ-வைகோவுடன் ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் நடந்த சந்திப்பு கனிவான முறையில் இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ஜஸ்வந்த் சிங் சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத்துக்கு அவர் ஆதரவு கோரினார்.
![]() |
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிங், நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் பேசினேன்.
இங்கு நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை எங்களது கட்சித் தலைவர் அத்வானியிடம் எடுத்துக் கூறுவேன். ஜெயலலிதா எனக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்ததற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது பேச்சு கனிவான முறையில் இருந்தது.
14ம் தேதி டெல்லி செல்லவிருப்பதாகவும், அங்கு மூன்றாவது அணி தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஜெயலலிதா ெதரிவித்தார்.
எங்களது கட்சியின் மதிப்பு மிக்க தலைவரான சுஷ்மா சுவராஜ் தனது டெலிபோன் மத்திய அரசால் ஒட்டுக் ேகட்கப்படுவதாக கூறியுள்ளார். அவர் ராஜ்யசபா துணைத் தலைவராக இருக்கிறார். எனவே அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.
இது எனக்கு வருத்தம் தருகிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவரச நிலை சூழல் நிலவுகிறது. இன்று சுஷ்மாவுக்கு ஏற்படுவது நாளை பிற தலைவர்களுக்கும் ஏற்படும் என்றார் ஜஸ்வந்த் சிங்.
ஜெ.வுடன் வைகோவும் சந்திப்பு:
ஜஸ்வந்த் சிங் சென்ற பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தார்.
இந் நிலையில் இன்று காலை மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தில் வைகோவை ஜஸ்வந்த் சிங் சந்தித்துப் பேசினார்.
சுமார் 1 மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் ஜஸ்வந்த் பேசுகையில்,
வைகோவும் நானும் 25 ஆண்டு நண்பர்கள். மக்களவை, மாநிலங்களவையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம்.
வைகோவின் கொள்கைப் பிடிப்பு அரசியல், நேர்மை இரண்டும் பாராட்டத்தக்கவை. நாட்டில் இப்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசவில்லை (அப்படியா..) என்றார்.
பின்னர் வைகோ பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் என்ற பெயரில் அராஜகத்தை நடத்தியுள்ளது திமுக. தனது கூட்டணிக் கட்சியினரைக் கூட போட்டியிட விடவில்லை.
இப்போது திடீர் ஞானோதயம் வந்து தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயகப் படுகொலை நடந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் கலைஞர் என்றார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!













Click it and Unblock the Notifications