உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்க: ஜெ.
சென்னை:கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்தது போல உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் கூட்டுறவு சங்க தேர்தல்கள் ரத்து என்று தற்போது கருணாநிதி அறிவித்துள்ளார்.
முறைகேடுகளுடன்தான் தேர்தல் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு கூட்டுறவு சங்கத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று நான் அறிவித்திருந்தேன்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவினர் வரலாறு காணாத வன்முறைகளை நிகழ்த்தினர். அவர்களது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இவற்றின் மூலம் கூட்டணிக் கட்சிகளே திமுகவை தீண்டத்தகாத கட்சி என்று நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டு இருக்கும், மனித சக்திகள் செலவழிக்கப்பட்டதோடு, அரசுத் துறையினர் இவற்றுக்காக பணியாற்ற பட்ட துயரங்கள் கணக்கில் அடங்காது.
கூட்டுறவு தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதால், திமுகதான் இந்த தேர்தலுக்கான செலவை அரசுக்குச் செலுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல்களிலும் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாலேயே கடுமையான கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளான உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை மற்றும் முறைடுகேடுகளால்தான் நடந்திருக்கிறது என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications