டிவிக்களுக்கு லைசென்ஸ் கட்டணம்-அரசு பல்டி
டெல்லி:தொலைக்காட்சிகளுக்கு உரிம கட்டணம் (லைசென்ஸ் பீஸ்)வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட மத்திய அரசின் தொலைக்காட்சி, வானொலி சேவைகளை பிரச்சார் பாரதி நிறுவனம் நடத்தி வருகிறது. இந் நிறுவனம் கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது.
இதையடுத்து புதிய வண்ணத் தொலைகாட்சி பெட்டி வாங்குபவர்களிடம் இருந்து தலா ரூ.500ம், கருப்பு-வெள்ளை தொலைகாட்சிப் பெட்டி வாங்குபவர்களிடமிருந்து ரூ.200ம் உரிம கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஆண்டுதோறும் ஒரு தொகையை லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டது.
இது குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருந்தது.
ஆனால், இதனால் பொது மக்களின் நேரடி அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என பெரும்பாலான அைமச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இத் திட்டத்தை கைவிட்டுள்ளது மத்திய அரசு.
தொலைக்காட்சிக்கு உரிம கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications