மதிமுக உயர் மட்டக் குழு உறுப்பினர் சபாபதி விலகல்:திமுகவில் இணைந்தார்
சென்னை:மதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் கட்சியின் உயர் மட்டக் குழுவின் உறுப்பினருமான மோகன் சபாபதி அக் கட்சியில் இருந்து விலகி இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் 250 மதிமுகவினரும் திமுகவில் இணைந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சபாபதி பேசுகையில்,
13 ஆண்டுகளாக திமுகவுக்கு விரோதமாக செயல்பட்டு பல்வேறு கணைகளை எய்தபோதும் எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
ஒரு இயக்கம் தோன்றுவது தவறல்ல. ஆனால், அந்த நாம் வெல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இன்னொரு இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடாது.
அண்ணாவின் கொள்கைகளை வைகோ போயஸ் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டார் என்றார்.
திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுகவை உருவாக்கியபோது உடன் இருந்த முக்கிய தலைவர் மோகன் சபாபதி. அவர் கட்சியின் அரசியல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் வைகோவின் முக்கிய ஆலோசகராகவும் இருந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த சபாபதி, மிகச் சிறந்த பேச்சாளராவார்.
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் இருந்தும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லிக்குப்பத்தில் இருந்தும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
12 ஆண்டுகளாக வைகோவுடன் இருந்து வந்த அவர், செஞ்சி ராமச்சந்திரன் விலகியவுடன் அவர் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என நினைத்திருந்தார். ஆனால், அந்தப் பதவியை மல்லை சத்யாவுக்கு வழங்கிவிட்டார் வைகோ.
இதையடுத்து ஜெயலலிதாவுடன் பேசி தனக்கு ராஜ்யசபா எம்பி பதவியையாவது வைேகா வாங்கித் தருவார் என நினைத்திருந்தார். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை.
இதனால் சமீபகாலமாக கட்சியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த மதிமுக மண்டல மாநாட்டை இவர் தான் துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் மாநாட்டுக்கே வரவில்லை.
இதனால் விரைவிலேயே சபாபதி கட்சிக்கு டாடா காட்டலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில் தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துவிட்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications