தம்பி மனைவியை அடித்துக் கொன்ற அண்ணன்
திருநெல்வேலி:திருநெல்வேலியில் தனி குடித்தனம் செல்ல வேண்டும் என கூறிய தம்பி மனைவியை உருட்டுகட்டையால் அடித்துக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள நடுதிடியூரை சேர்ந்தவர் பரமசிவம், விவசாயி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
பரமுசிவம் தன்னுடைய தாயார் மற்றும் அண்ணன் நம்பியுடன் கூட்டுக் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் மீனா தனி குடித்தனம் செல்ல விரும்பினார். இது பற்றி அவர் கணவர் பரமசிவத்திடம் கூறியபோது, அவர் தனிக்குடித்தனம் செல்வதற்கு மறுத்து விட்டார்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை அறிந்த நம்பி, மீனாவை கண்டித்தார். அதற்கு மீனா நாங்கள் தனிக்குடித்தனம் செல்வதை தடுப்பதற்கு நீங்கள் யார் என்று கேட்டார். இது நம்பிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று காலை வயலில் மீனாவும், அவரது மாமியாரும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த நம்பி மீ்னாவின் தலையில் உருட்டு கட்டையால் அடித்தார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சேரன்மகாதேவி போலீசார் விரைந்து வந்து நம்பியை கைது செய்தனர்.
கருணாநிதி பேச்சு:
திமுகவில் இணைந்த சபாபதி மோகனை, முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
திமுகவில் இணைந்துள்ள இந்த தம்பிமார்களின் முடிவு சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் எனக்கு ஏற்பட்ட பெரிய ஆச்சரியம், என்னை விட்டு சிலர் பிரிந்து சென்றபோது சபாபதி மோகனுமா பிரிந்து சென்றுவிட்டார் என கேட்டேன்.
ஏனென்றால் என்னை விட்டு பிரிக்க முடியாதவர் என அவர் மீது அளவுகதிகமாக அன்பை பொழிந்தவன். இயற்கையாக ஒன்று நடக்க வேண்டியது நடந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
திமுகவில் மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதற்கு காரணம் திராவிட இயக்கத்தில் மூல கொள்கைகளை மறந்து விடவில்லை. திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் வேறு இடத்தில் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு வரும் என நினைத்தேன்.
சபாபதி மோகன் இங்கு பேசும்போது, ஒரு இயக்கத்தை தோற்றவிப்பது பெரியதல்ல. ஆனால் அந்த இயக்கத்தை நடத்துபவர் மற்றொரு இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என நினைக்கக் கூடாது என்று கூறினார்.
திமுகவை அழித்து விடலாம் என நினைப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்களே தவிர திமுகவிற்கு எதுவும் ஆகாது என்பதை கண்டிருக்கிறோம். இங்கு வந்து இணைந்தவர்களை யாரும் அழைத்து வரவில்லை. அவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக வந்திருக்கிறார்கள்.
சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைப்பவர்களுடன் (ஜெயலலிதா) கைகோர்த்து இருக்கிறார் (வைகோ) என சபாபதிமோகன் கூறினார். மேடைக்கு மேடை சேது சமுத்திர திட்டம் வருவதற்காக நான்தான் காரணம் என கூறியவர் இப்போது பேசுவதில்லை, காரணம் அவர் சேர்ந்த இடத்தில் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு காலத்தில் அவர்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.
சேது சமுத்திர திட்டம் தன் குரல் வலிமையால் தான் வந்தது என பெருமைபட்டவர், தற்போது அதற்கு ராமர் பாலம் என பெயர் சூட்டி அதை இடித்து தள்ளி விட கூடாது, அது இருந்தால்தான் இந்தியாவிற்கு விமோசனம் என பேசுகிறார். அவர்கள் சேது திட்டத்திற்காக போகவில்லை. வேறு ஏதோ திட்டத்தோடு சென்றுள்ளனர்.
என்னுடைய காலத்தி்ல திராவிட இயக்கம் இன்னும் வலுப்பெற்று இயங்க வேண்டும். திராவிட இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கமும் வலுவாக இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டுதான் கண் மூடவேண்டும்.
மதிமுக நண்பர்கள் பொடா சட்டத்தில் ஜெயலில் இருந்தபோது பல கூட்டங்களில் பேசும்போதும், செஞ்சி ராமசந்திரன் இல்ல திருமண விழாவில் பேசும்போதும் திராவிட இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கூறினேன்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது இணைய முடியாமல் செய்து விட்டார்கள், அவ்வாறு செய்தவர்கள் யார் என குறிப்பிட விரும்பவில்லை.
ஆரிய ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆரிய மாயையை வீழ்த்த தான் அண்ணாவும் பெரியாரும் பாடுபட்டனர். திமுகவிற்கு பலம் சேர்க்க இந்த சூழ்நிலைகளை மாற்றுவதற்கு இளைஞர்கள் சூறாவளியாக மாறவேண்டும் என்றார் கருணாநிதி.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications