மன்மோகன் சிங்-ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் பேச்சு
டெல்லி:இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்சுடன் தொலைபேசியில் பேசினார்.
ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துவது என்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
![]() |
இதன் மூலம் இந்தியாவில் மின்சார உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் அமெரிக்கா வழங்கும்.
ஆனால் அமெரிக்கா வழங்கும் எரிபொருளை பயன்படுத்தியபின் அதை மறுசுழற்சிக்கு இந்தியா பயன்படுத்தக் கூடாது எனவும், அணு குண்டு சோதனையை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒப்பந்தம் சிக்கலாகியுள்ளது.
![]() |
இதுகுறித்து கடந்த மாதம் ஜெர்மனியில் ஜீ-8 மாநாட்டில் மன்மோகன் சிங்கும், புஷ்சும் பேச்சு நடத்தினர்.
மேலும் வாஷிங்டனில் வரும் 16ம் தேதி இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளர் நாராயணனும், அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஸ்டீபன் ஹார்ட்லியும் இந்த ஒப்பந்தத்தின் முட்டுக்கட்டைகளை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் புஷ்சுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களை பற்றி பேசிய அவர்கள், செப்டம்பர் மாதம் இருவரும் சந்திப்பு என முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரூ தெரிவிக்கையில்,
பிரதமரும் புஷ்ஷூம் தொலைபேசியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மனம் திறந்து பேசினர். இரு நாட்டு தேசிய பாதுகாப்பு செயலாளர்களும் சந்தித்து முடித்த பின் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ் இந்தியா வரவிருக்கிறார் என்றார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!














Click it and Unblock the Notifications