சென்னை போலீஸில் அதிரடி மாற்றம்
சென்னை:சென்னை மாநகரில் பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் பல காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 3 பெண் அதிகாரிகள் துணை ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை என்ற விகிதத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையில் பெரும் களையெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை பல இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் துணை ஆணையாளர்கள் மட்டத்தில் களையெடுப்பு நடந்துள்ளது.
வண்ணாரப்பேட்டை, அடையாறு, கீழ்ப்பாக்கம், தியாகராய நகர் மற்றும் தென் சென்னை போக்குவரத்து காவல் ஆகியவற்றுக்கான துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக விஜயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.நகர் துணை ஆணையராக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சேஷசாய், அடையாறு துணை ஆணையராகிறார்.
தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக ஆவடி காவல்படை கமாண்டர் சத்தியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த ரவிக்குமார் டிஜிபி அலுவலக நிர்வாக உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடையாறு துணை ஆணையராக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, ஆவடி விசேஷ காவல் படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் துணை ஆணையர் பாஸ்கரன், சென்னை சிலை திருட்டுப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த பிரபாகரன், மதுரை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை நகரில் தற்போது 5 பெண் துணை ஆணையர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று சரகங்களைத் தவிர அண்ணா நகர், வடசென்னை போக்குவரத்து ஆகிய இடங்களிலும் பெண் துணை ஆணையர்களே உள்ளனர்.
இதுதவிர திருச்சி ரயில்வே எஸ்.பி. கார்த்திகேயன், கோவை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை எஸ்.பி. துரைகுமார், திருச்சி ரயில்வே எஸ்.பி ஆகிறார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications