பெண்ணை ஏமாற்றினாரா தலைவர் மூமுக சேதுராமன்?
சென்னை:விவகாரத்தான பெண்ணை மூ.மு.க நிறுவனர் டாக்டர் சேதுராமன் ஏமாற்றிவிட்டார்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(36). ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு திருமண மையத்தில் தன் பெயரை மறுமணத்திற்காக பதிவு செய்திருந்தார்.
இந்த திருமண தகவல் மையத்தின் உரிமையாளர் பாலச்சந்திரன் சீதாலட்சுமியிடம், உனக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமனை கல்யாணம் செய்ய விருப்பமா? எனக் கேட்டுள்ளார்.
மேலும் சேதுராமன் ஏற்கனவே திருமணம் ஆகி நல்ல வசதி வாய்ப்போடு இருக்கிறார். சரி என்று சொன்னால் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என பாலச்சந்திரன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதில் மயங்கிய சீதாலட்சுமியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சேதுராமனும், சீதாலட்சுமியும் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது சேதுராமன், நீ என் அலுவலகத்தில் வேலை செய். பின்னர் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சீதாலட்சுமி 1 மாதம் சேதுராமனின் அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளார். கடைசியில் சேதுராமனுக்கு தனக்கு விருப்பமில்லை என்று கூறி சீதாலட்சுமியை கழட்டி விட்டதாக சொல்கிறார்கள்.
இதையடுத்து சீதாலட்சுமி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தந்த புகாரில், என்னை கல்யாணம் செய்கிறேன் என்று சொல்லி சேதுராமன் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் மூ.மு.க. நிறுவனர் டாக்டர் சேதுராமன் மீது போலீஸார் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சேதுராமனின் டிரைவர் மற்றும் திருமண மைய உரிமையாளர் பாலச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சேதுராமனிடம் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாராம்.
அவர் திரும்பி வந்தவுடன் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications