காந்தியின் பேரன் துணை ஜனாதிபதியாவாரா?
டெல்லி:துணை ஜனாதிபதி பதவியில் சிறுபான்மை இனத்தவரை அமர்த்த இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
முதலில் சோம்நாத் சாட்டர்ஜி, பின்னர் ஏ.பி.பர்தான் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு அடிபட்டன. ஆனால், இருவருமே இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இப் பதவியில் அமர்த்த இடதுசாரிகள் முடிவு செய்துள்ளதாக ெடல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது. துணை ஜனாதிபதிக்கான தேர்தலுக்கும் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது.
இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில்,
நாங்கள் இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் பிரதீபா பாட்டீலை வெற்றி பெறச் செய்வதற்காக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இன்னும் துணை ஜனாதிபதி வேட்பாளரை பற்றி முடிவெடுக்கவில்லை. எங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து டெல்லியில் தினமும் முக்கிய ஆலோசனை நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவர்களின் ஆலோசனையில் முஷிருல் ஹசன் பெயர் முதலிடத்தில் உள்ளது.
சிறந்த வரலாற்று அறிஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்து வருகிறார். இதை நிறுவியர் முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஆவார்.
மேலும 1970ம் ஆண்டிலிருந்து மேற்கு வங்க சட்டசபையின் சபாநாயகராக உள்ள அப்துல் ஹலீமின் பெயரும் அடிபடுகிறது. கம்யூனிஸ்ட் என்றாலும் நடுநிலையான கொள்கைகள் கொண்ட இவர் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் தோழராவார்.
சிறுபான்மை இனத்தவரான அப்துல் கலாமை ஆதரிக்காததால் தங்கள் மீது இஸ்லாமியர்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதும் இடதுசாரிகள் அதை சரிகட்டவே சிறுபான்மை இனத்தவரை நிற்க வைக்க முயல்வதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மகாத்மா காந்தி மற்றம் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை நிற்க வைக்கவும் காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!













Click it and Unblock the Notifications