சிவகங்கை கார் குண்டுவெடிப்பு- காயமடைந்தடிரைவருக்கு ரூ. 2 லட்சம்: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டிக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை நகராட்சியில் கடந்த 29.7.2007 அன்று வாகனத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் வாகன ஓட்டுநர் பாண்டி படுகாயமடைந்தார்.

அவரது வலது கால் துண்டிக்கப்பட்டும், இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு பிளேட் வைக்கப்பட்டும் தொடர் அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அபாய கட்டத்தில் உள்ள தனது கணவரைக் காப்பாற்ற தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் இருப்பதாக முதல்வர் கருணாநிதிக்கு பாண்டியின் மனைவி முத்துலட்சுமி மனு அளித்திருந்தார்.

அதில் மருத்துவ உதவிக்கு பணம் தேவை என்று கோரியிருந்தார். இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைத்திருந்தார்.

எனவே கால்களை இழந்துள்ள பாண்டி தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அவரது தொடர் மருத்துவச் செலவுக்காக, மனிதாபிமான அடிப்படையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+