ஷெகாவத்துக்கு ஓட்டு-அதிமுக, மதிமுகதேமுதிகவுக்கு பாஜக மீண்டும் கோரிக்கை
சென்னை:நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத்துக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக, மதிமுக, தேமுதிகவுக்கு பாஜக மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,
ஜனநாயக நெறிமுறைகளைக் காக்கவும் நாட்டின் கெளரவத்தை நிலைநாட்டவும் ஷெகாவத்துக்கு அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகியவை வாக்களிக்க வேண்டும்.
பிரதீபா பாட்டீல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மதவாத சக்திகள் ஆதரிப்பதால் ஷெகாவத்தை ஆதரிக்க முடியாது என இடதுசாரிக் கட்சிகள் கூறுகின்றன.
சிவசேனையால் ஆதரிக்கப்படும் பிரதீபாவை மட்டும் எப்படி இவர்கள் ஆதரிக்கின்றனர். காங்கிரசிடம் தங்கள் கொள்கைகளை இடதுசாரிகள் அடகு வைத்துவிட்டன.
ஷெகாவத்துக்கு ஆதரவு கோரி விஜய்காந்தை சந்தித்துப் பேசியுள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்தித்துப் பேசுவோம் (தேர்தல் நாளைக்கு சார்..)
முக்கிய பிரச்சனைகளில் பாமக தலைவர் ராமதாஸ் எடுக்கும் நிலைப்பாடு சரியாகவே இருக்கிறது. மேட்டூர் அணையை முன்பே திறந்திருக்க வேண்டும். தாமதமாகத் திறப்பதால் விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லை என்பது உறுதியாகிவிட்டது என்றார்.
பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ ராஜாவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications