இலங்கை அருகே கடலில் சக்தி வாய்ந்தபூகம்பம்: சுனாமி ஆபத்து இல்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், கொழும்புக்கு கிழக்கில், கடல் பகுதியில் 35 கிேலா மீட்டர் ஆழத்தில், இன்று காலை 5.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது என்று ெதரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சுனாமி அலைகள் எழக் கூடும் என்று பீதி எழுந்தது. இருப்பினும் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இலங்கை தேசிய இயற்கைப் பேரிடர் நிர்வாக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி ஏகநாயகே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏகநாயகே கூறுகையில், இதுவரை சுனாமி அலைத் தாக்குதல் எதுவும் இல்லை. மட்டக்களப்பு மற்றும் ஹம்பனடோட்டா ஆகிய பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றார்.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி அலைகள் தாக்கியதில் இலங்கை பெரும் பேரழிவைச் சந்தித்தது. சுமார் 35,000 பேர் உயிரிழந்து நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+