நீதித்துறையிலும் 27%:
ஹைதராபாத்:உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில ஐக்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான போராட்ட குழுவின் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நீதித்துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியது அவசியம். உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதேபோல, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் அதிகாரத்தைப் பெறவும், நீண்ட காலமாக சந்தித்து வரும் பிரச்சினைகள், கோரிக்ககைள பூர்த்தி செய்யவும், அனைத்து சமூகத்தினரும், சிறுபான்மையினரும், எஸ்.சி, எஸ்.டி. சமூகத்தினரும் இணைந்து போராட வேண்டும்.
இதேபோல தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications