எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே முடிவு செய்துஓட்டுப் போட்டார்களாம்- ஜெ சொல்கிறார்
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக தேதர்தல் ஆணையம் கொடுத்த குளறுபடியான விளக்கத்தால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசித்து, அவர்களாகவே முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை 3வது அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந் நிலையில் வாக்குப் பதிவு முடியும் தருவாயில், ஜெயலலிதாவிடம் ஒரு விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது,
கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது அனைவரின் கடமை.
இருப்பினும் ஓட்டளிப்பதும், ஓட்டளிக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். மேலும், தேர்தலில் ஓட்டளிப்பதை கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.
இந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி இறுதியில் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக் கொண்டு ஓட்டளித்துள்ளனர் என்று சுற்றி வளைத்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கை படு குழப்பமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அதிமுக உறுப்பினர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளாரா அல்லது தன்னுடன் ஆலோசிக்காமல், அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பழியைப் போடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மொத்தத்தில் அதிமுக இன்று அடித்த பல்டி சாதாரண பல்டி அல்ல. டபுள் அந்தர் பல்டி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications