ஏர் டெக்கான்: சிறுசு போய் பெருசு வருது!
சென்னை:தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய விமான நிறுவனமான ஏர் டெக்கான் தன்னிடம் உள்ள சிறிய ரக விமானங்களை ஓரம் கட்டி விட்டு பெரிய விமானங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மிக வேகமாக வளரும் விமான நிறுவனமாக ஏர் டெக்கான் விளங்குகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவிலான விமான சேவைகள் மற்றும் விமானங்களைக் கொண்டுள்ள நிறுவனம் ஏர் டெக்கான்தான்.
இந்த நிலையில் தன்னுடைய சேவையை ஏர் டெக்கான் விரிவுபடுத்தியுள்ளது.
சென்னை-மதுரை, சென்னை-கோவை மார்க்கத்தில், இதுவரை பயன்படுத்தி வந்த 72 பேர் அமரக் கூடிய ஏடிஆர்-72 ரக விமானத்திற்குப் பதிலாக தற்போது 180 பேர் அமரக் கூடிய ஏர்பஸ் ஏ-320 விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் தலைவர் கோபிநாத் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராம்கி சுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்த வசதிகள் தவிர சென்னை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் புதிதாக ஒரு மாலை நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீட் எண்ணிக்கையைப் பொருத்தவரை, தென்னகத்திலேயே முன்னணியில் உள்ளது ஏர் டெக்கான். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிப்பதில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது ஏர் டெக்கான்.
திருவனந்தபுரம், மதுரை, கோவை போன்ற நகரங்களில் எங்களது விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நகரங்களின் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
இந்த நகரங்கள் தகவல் தொழில்நுட்ப நகரங்களாகவும், நவீன நகரங்களாகவும் மாறி வரும் நிலையில், எங்களது குறைந்த கட்டண விமான சேவைக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications