பெண்ணிடம் தங்க நாணயம் மோசடி முயற்சி:பெண் கைது
சென்னை:இரும்பு நாணயங்களை தங்க நாணயங்கள் என்று கூறி பெண்ணிடம் மோசடி செய்ய முயன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இவருக்குப் பின்னால் பெரிய கும்பலே இருக்கலாம் என சந்ேதகிக்கப்படுகிறது.
சென்னை நகரில் வட மாநில கும்பலைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகளை அணுகி தங்க நாணயம் தருகிறோம் என்ற பெயரில் மோசடி செய்து நகை, பணத்தைப் பறித்துச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் ஒரு பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த சாரதா என்ற 35 வயதுப் பெண் வந்தார்.
சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு பெண்ணை அணுகிய அவர், நான் வழியில் சில தங்க நாணயங்களைக் கண்டெடுத்தேன். பணம் கொடுத்தால் அதைத் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் தங்க நாணயம் தருகிறேன் என்று கூறியதைக் கேட்டு சந்தேகமடைந்து சுதாரித்த அந்தப் பெண், அந்தப் பெண்ணை அமர வைத்து விட்டு மெதுவாக அங்கிருந்த போலீஸாரிடம் தகவல் தந்தார்.
விரைந்து வந்த போலீஸார் சாரதாவை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் பத்து தங்க நாணயங்கள் இருந்தன. அதை போலீசார் சோதித்தபோது அவை இரும்பு என்று தெரியவந்தது.
முலாம் பூசி தங்க நாணயம் போல மாற்றி வைத்திருந்தார்.
அந்தப் பெண்ணை கைது செய்த ேபாலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும் சென்னையில் தங்கி மோசடி செய்து வரும் வட மாநில கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சாரதாவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications