கருணாநிதியுடன் து.ஜனாதிபதி வேட்பாளர் அன்சாரி சந்திப்பு
டெல்லி:டெல்லியில் முதல்வர் கருணாநிதியை துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் முகம்மத் ஹமீத் அன்சாரி சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரோடு கிளம்பிய கருணாநிதி, இரவு 8.10 மணிக்கு டெல்லி வந்தடைந்தார்.
![]() |
விமான நிலையத்தில் அவருக்கு மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களை சந்தித்த கருணாநிதி,
நதிகள் இணைப்பு தொடர்பாக பிரதமருக்கு ஏற்கனவே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடந்த முறை வந்தபோதும் நேரிலும் பேசினேன். அவற்றின் தொடர்ச்சியாக மீண்டும் அவருடன் பேசுவேன்.
சுயநிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்களின் நலன்களை காக்க தொடர்ந்து பாடுபடுவோம், அதற்காக வாதாடுவோம். சட்டத் திருத்தம் தேவையாக இருக்குமானால் அதையும் கொண்டு வந்து மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்றார்.
![]() |
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி வெளியுறவுத் துறையில் உள்ளவர்களோடு பேசுவீர்களா என்று கேட்டபோது, முயற்சி செய்வேன், வாய்ப்பு கிடைத்தால் பேசுவேன் என்றார்.
இன்று காலை காங்கிரஸ் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முகம்மது ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
![]() |
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அன்சாரி, மூத்த தலைவரான கருணாநிதியின் ஆசிர்வாதத்தையும் வழிகாட்டுதலையும் பெற வந்தேன் என்றார்.
மாலையில் சோனியாவையும், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.
நாளை ராஜ்யசபா உறுப்பினர்களாக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழி, சிவா ஆகியோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். இதிலும் கருணாநிதி பங்கேற்கிறார்.நாளை இரவு கருணாநிதி சென்னை திரும்புகிறார்.















Click it and Unblock the Notifications