ஆகஸ்ட் 5ம் தேதி சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்
திருநள்ளாறு (காரைக்கால்):
சனீஸ்வர் பகவான் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 5ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் சனி பகவான் கடக ராசியிலிருந்து இடம் பெயர்ந்து சிம்ம ராசிக்கு செல்கிறார்.
இதையொட்டி சனி பகவானின் ஆலயமான புதுவை மாநிலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சனிப்பெயர்ச்சி தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சனி பகவான் ஆலயத்திற்கு பல லட்சம் பேர் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக கோவிலில் 3 வரிசைகளில் பக்தர்கள் நின்று சனி பகவானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications