வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்!
திருநெல்வேலி:
-இசக்கிராஜன்
தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர்.
இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர்.
இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.
மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள போகநல்லூரில் உள்ள அகதிகள் முகாமில் 157 குடும்பங்களை சேர்ந்த 593 பேர் வசிக்கின்றனர்.
இங்கு போதிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு இல்லாததால் வறுமையோடு இவர்கள் போராடி வருகின்றனர். இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தமிழக அரசிடம் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி கோரி விண்ணபித்தனர்.
தற்போது இலங்கையில் விடுதலை புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் மோதல் முற்றி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பி அனுமதி கோரி அகதிகள் கோரியிருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் 28 அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் சங்கர் என்பவர் தலைமையில் வரும் 30-ந் தேதி இலங்கைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இது போன்று இன்னும் ஏராளமான அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல இம்முகாமில் இருந்து மனுச் செய்துள்ளனர். இது குறித்து அகதிகள் தரப்பில் சங்கர் என்பவர் கூறியதாவது,
எங்களுக்கு இலங்கையில் நிலம், வீடு அனைத்தும் உள்ளது. மேலும் வேலை வாய்ப்பும் உள்ளது. இங்கு வறுமையோடு பேராாட முடியவில்லை. இதனால் தான் உயிரைப் பணயம் வைத்தாலும் பரவாயில்லை, இலங்கைக்குச் சென்றுவிடுவது என்று தீர்மானித்து விட்டோம் என்றார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications