பெண் போலீஸாரை ஆபாசமாகதிட்டிய ஏட்டு கைது
சென்னை:பெண் போலீஸாரிடம் ஆபாசமாக பேசியம், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களைத் திட்டியும் முறைகேடாக நடந்து கொண்ட தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்து வருபவர் ரகு. குடிப்பழக்கத்தால் குணம் கெட்டு நடந்து கொள்வாராம். அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் வேலைக்கு வராமல் நின்று விடுவது வழக்கம்.
கடந்த ஒரு மாதமாக ரகு வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு காவல் நிலையம் வந்துள்ளார் ரகு. நல்ல போதையில் இருந்த அவர் அங்கிருந்த பெண் போலீஸாரை ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களிடமும் ரகளை செய்துள்ளார்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது. உடனடியாக ரகுவைக் கைது செய்யுமாறு உத்தரவு வந்தது. இதைத் தொடர்ந்து ரகு கைது செய்யப்பட்டார். அவர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications