தவறாக ஒலித்த தீ விபத்து தடுப்பு அலாரம்ப.சிதம்பரம் விழாவில் பரபரப்பு
சென்னை:சென்னையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட விழா நடந்த அரங்கில் தீயணைப்பு எச்சரிக்கை மணி தவறுதலாக ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் அரவாணிகளுக்கான சுகாதார இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரவணிகள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென தீயணைப்பு எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரும், மற்றவர்களும் மணி ஒலித்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால் தீவிபத்து ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். இதையடுத்து தீவிபத்து ஏதும் ஏற்படவில்லை என்று அரங்கில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே விழாவுக்கு வந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
யாரோ சிலர் தவறுதலாக அந்த மணியின் பொத்தானை அழுத்தியிருக்க வேண்டும், அதனால்தான் மணி ஒலித்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தவறுதலாக மணி ஒலித்ததால் சில விநாடிகள் தடங்கலான விழா பின்னர் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications