டி.எஸ்.பி. மனைவி தற்கொலை வழக்கு-சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை
டெல்லி:18 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ தடை விதிக்க முடியாது, அது குற்றச் செயலும் அல்ல என்று டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அஜீத் குமார் என்பவரும், 17 வயது இளம் பெண் ஒருவரும் காதலித்தனர். சாதியைக் காரணம் காட்டி இருவரும் காதலிக்க, கல்யாணம் செய்து கொள்ள இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் தனிக் குடித்தனத்தையும் தொடங்கி வசிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விட்டதாக அஜீத்குமார் மீது பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து அஜீத் குமாரை போலீஸார் கைது செய்து அவர் மீது மைனர் பெண்ணைக் கற்பழித்ததாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை டெல்லி 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி காமினி பிறப்பித்த தீர்ப்பில், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலிக்கக் கூடாது, கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடை விதிக்க முடியாது.
காதலிப்பதும், கல்யாணம் செய்து கொள்வதும் குற்றச் செயல் அல்ல. யார் வேண்டுமானாலும், யாரையும் காதலிக்கலாம். இதற்கு அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வகை செய்கிறது.
குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால்தான் தனது காதலரை வரவழைத்து அந்தப் பெண் கோவிலில் போய் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே அவர் விரும்பித்தான் அஜீத்குமாரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். எனவே அஜீத்குமார் மீதான கற்பழிப்பு புகாரை ஏற்க முடியாது.
மேலும் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் ரத்தப் பெருக்கோ அல்லது வெளிக் காயங்களோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் தாம்பத்ய உறவு நடந்துள்ளது. ஆனால் கல்யாணமான இவர்களுக்கிடையே தாம்பத்ய உறவு நடந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று பரபரப்புத் தீர்ப்பளித்தார் நீதிபதி காமினி.
மைனர் காதல் விவகாரத்தில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வழக்கமான மைனர் பெண் காதலித்து திருமணம் செய்தால், அவரை மணம் முடித்தவர் மீது கற்பழிப்பு வழக்கு போடப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு கிரிமினல்-சிவில் சட்டம் தொடர்பான மிக முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications