விதி மீறல் கட்டிடங்களை காக்க அவசர சட்டம்!
சென்னை:சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டியுள்ள 75ஆயிரம் கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.
கடந்த அதிமுக அரசு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை நெறிபடுத்துவதற்காக, நெறிப்படுத்தும் சட்டம் ஒன்றை 1999ல் கொண்டு வந்தது. அதன்படி சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை நெறிப்படுத்த 5458 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
1999ல் போடப்பட்ட திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பிளான் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு 3 மடங்கு அபராதத் தொகை செலுத்தினால் போதும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதன்படி கிடைத்த ரூ.600 கோடி ரூபாய் வருவாயை சிஎம்டிஏ அப்போதைய அரசிடம் சமர்ப்பித்தது.
கடந்த 2002ல் தனியார் அமைப்பு பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 1999ல் போடப்பட்ட திட்டமே செல்லும். அதன்பிறகு அரசால் நீடிக்கப்பட்ட இந்த திட்டம் செல்லாது என தீர்ப்பளித்தது.
இந்தப் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்றும் வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின்பு இதை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் குழு ஒன்றை திமுக அரசு நியமனம் செய்தது.
சென்னை நகரின் தற்போதைய கணக்கெடுப்பின்படி 75 ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக தி.நகர், புரசைவாக்கத்தில் தான் அதிகமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
75 ஆயிரம் கட்டிடங்களை இடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதனால் தமிழ்நாடு நகர்ப்புற வடிவமைப்பு சட்டம் 1971ஐ மறு ஆய்வு செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்து உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஆனால் இந்த மனுத்தாக்கலுக்கு முன்பாகவே அவசர சட்டம் மூலமாக தமிழ்நாடு நகர்ப்புற வடிவமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டம் இயற்றுவதற்கான பணிகள் வெகுவிரைவாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், எந்த அரசாங்கம் இந்த திட்டத்தை கொண்டு வந்தது என்பது இங்கு முக்கியம் இல்லை. பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் எவரும் பாதிக்காத வண்ணம் தீர்வு காண்பதுதான் சரியாகும். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications