தாதா.. டாடா.. ஜெ: தொழிற்சாலை திட்டம்நிறுத்தி வைப்பு- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஒரு தாதாவுக்காக டாடாவின் டைட்டானியம் டை ஆக்சை திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

டாடா நிறுவனம் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ள டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்திற்கு அதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஜெயலலிதா நேரடியாக போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

கடந்த 2002ம் ஆண்டு டாடா நிறுவனத்துடன் இந்தத் திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் போட்டதே ஜெயலலிதாதான். இந்தத் திட்டத்தை பின்னர் கிடப்பில் போட்டதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கொடுத்த அறிக்கைதான் காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால் அது உண்மையல்ல. ஜெயலலிதா கூறுவது போல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கொடுத்த அறிக்கை அதற்குக் காரணமல்ல. மாறாக அந்த மாவட்டங்களின் கணிம வளத்தை சுரண்டி வரும் ஒரு தாதாவுடன் (ஜெயா டிவி ஷேர் ஹோல்டரான வைகுண்டராஜன்?) ஜெயலலிதா செய்து கொட எழுதப்படாத ஒப்பந்தமே அதற்கு முக்கியக் காரணம்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்படும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். எனவே மக்களின் கருத்தை அறிந்த பின்னர் இந்தத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மக்களின் கருத்தை அறிந்த பின் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளதன் மூலம் டாடா தொழிற்சாலைத் திட்டத்தை இப்போதைக்கு நிறுத்தி வைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+