7 கி.மீ. தூரம் துரத்தி துரத்தி கொள்ளையனைஅடித்துக் கொன்ற பொதுமக்கள்
சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே லாரியிலிருந்து பொருட்களை திருட முயன்ற கொள்ளையனை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கற்களால் அடித்துக் கொலை செய்தனர். இன்னொருவனை துரத்திப் பிடித்தனர்.
வாழப்பாடி அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்த பொருட்களை திருடும் முயற்சியில் 9 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருந்தது.
இந்தக் கும்பலை அந்தக் கிராம மக்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து கொள்ளைக் கும்பலை கிராம மக்கள் வளைத்தனர். ஆனால் அவர்களிடமிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஆனாலும் விடாத கிராம மக்கள் கொள்ளைக் கும்பலைத் துரத்தினர்.
கிட்டத்தட்ட 7 கி.மீ தொலைவுக்கு கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்தினர். இதில் 2 பேர் சிக்கினர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
பிடிபட்ட இரு திருடர்களும், கத்தியால் கிராம மக்களை தாக்க முயன்றனர். இதனால் கிராம மக்கள் ெகாதிப்படைந்தனர். அத்தனை பேரும் சேர்ந்து கொள்ளையர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
இதில் ஒருவர் மண்டை உடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். இன்னொருவரை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது மயக்கமடைந்து கிடந்த கொள்ளையன் இறந்து விட்டான்.
இறந்த நபரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. கூட்டாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பிடிபட்ட கொள்ளையன் பெயர் செந்தில்குமார். இவர் உடையாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரை போலீஸார் கைது செய்தனர்.
கிராம மக்களிடம் சிக்கி கொள்ளையன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications