பாஜகவுடன் சேர்ந்து ராமர் பால கதையளக்கும் ஜெ- கருணாநிதி தாக்கு
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதில் தான் உறுதியாக இருந்தார் என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனது வாழ்நாளில் பொய், புரட்டு, பித்தலாட்டம் ஆகியவற்றை தனது பொது வாழ்வுக்கான மூலதனமாகக் கொண்டு நீண்ட காலமாக மக்களை ஏமாற்றலாம் என ஜெயலலிதா நம்பிக் கொண்டிருக்கிறார்.
பொழுது போனால் ஒரு அறிக்கையும், பொழுது விடிந்தால் ஒரு அறிக்கை விடுவதன் மூலம் நானும் அரசியல் இருக்கிறேன் என்று விளம்பரம் தேடிக் கொள்கிறார்.
ஜெயலலிதா தனது திட்டங்கள் அல்லது கொள்கைகளில் எதில் உறுதியோடு இருந்திருக்கிறார்.
சேது கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என போர்க்குரல் எழுப்பி அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியாக கூறினார். ஆனால் இப்போது சேது கால்வாய் திட்டம் திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்துவதால் அதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.
எந்தவொரு மறியலுக்கும், போராட்டத்திற்கும் இவர் செல்ல மாட்டாராம். ஆனால் அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு தேவையில்லாத செயல்களை செய்வார். பாஜகவுடன் சேர்ந்து கொண்டு ராமர் பாலம் என்று கதை அளக்கிறார்.
3வது அணி சார்பாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு செய்து வீர முழக்கம் வேறு கொடுத்தார். ஆனால் 3வது அணியில் அங்கம் வகிப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர் பாஜகவுக்கு ஆதரவாக தங்கள் உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்துள்ளார். அதிலும் பிரதிபா பாட்டீலுக்கு ஆதரவாக 4 ஓட்டுக்கள் கிடைத்தது.
3வது எடுத்த முடிவுக்கு மாறாக மதிமுக, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத், சமாஜ்வாடி கட்சிகளும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போட்டுள்ளன. ஆதலால் நான் மட்டும் 3வது அணிக்கு துரோகி கிடையாது. மற்றவர்களும் துரோகிகள்தான் என்பது போல இப்போது விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் அந்த அணியில் உள்ள தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
கேபிள் டிவியை நாட்டுடமையாக்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான சட்டம் கொண்டு வந்த பின்னர், அது மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது என தெரிந்த பின்பு, அந்த சட்டம் அமலுக்கு வராமல் போனது.
இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு, மாநில அரசு கேபிள் டிவியை தனியார் நிறுவனங்களை போல நடத்த முயற்சித்தால், அரசாங்கம் உள்நோக்கத்துடன் நடத்தப் போவதாக ஜெயலலிதா அர்ச்சனை செய்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
2வது நாளாக கலெக்டர்கள் மாநாடு:
இந் நிலையில் கருணாநிதி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு இன்று இரண்டாவது நாளாக நடந்தது.
நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் வளர்ச்சித் திட்டங்கள், இலவச கலர் டிவி வழங்குதல், இலவச கேஸ் அடுப்புகள், நிலப் பட்டா, ரேசன் கார்டுகள் வழங்குதல் ஆகியவை குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்று நக்ஸல்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!











Click it and Unblock the Notifications