அடியாட்களுடன் துப்பாக்கி முனையில்தொழிலதிபரை மிரட்டிய நடிகை கைது
சென்னை:பல்வேறு திரைப்படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ள பத்மாவதி என்ற நடிகை, தனது அடியாட்களுடன் தொழிலதிபரை மிரட்டி ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கும் பிரதீப் என்ற தொழிலதிபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.
சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பத்மாவதியும், பிரதீப்பும் ரூம் போட்டுத் தங்கி தங்கி மஜா செய்துள்ளனர். பிரதீப் பெரும் பணக்காரர் என்பதால் அவரிடமிருந்து பெரும் பணத்தைப் பறிக்க திட்டம் தீட்டினார் பத்மாவதி.
இதையடுத்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் தனது அடியாட்களான சஞ்சய், அமீர்ஜான், சந்திரன் ஆகியோரை வரவழைத்தார். பின்னர் அவர்கள் உதவியுடன், பிரதீப்புடன் படு நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் பத்மாவதியும், அவரது ஆட்களும் சேர்ந்து அந்தப் புகைப்படங்களை பிரதீப்பிடம் காட்டி துப்பாக்கி முனையில், எங்களுக்கு ரூ. 10 கோடி பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் புகைப்படங்ளை பத்திரிகைகளுக்கு அனுப்பி பெயரைக் கெடுத்து விடுவோம், உனது வாழ்க்கையையே நாசப்படுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
நேற்று முழுவதும் கிட்டத்தட்ட பிணைக் கைதி போல பிரதீப்பை வெளியேற விடாமல் நான்கு பேரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் சிக்கி சிரமப்பட்ட பிரதீப், எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் போலீஸுக்கு அவர் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து பத்மாவதி மற்றும் மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications