சென்னை என்ஜீனியர் கொலை- ஆந்திராவில் பிணம் கண்டுபிடிப்பு
சென்னை:சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நாராயணன். என்ஜீனியரான இவர் எம்.பி.ஏவும் படித்துள்ளார். கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு மூன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
என்ஜினியரிங் படித்த ஜெயஸ்ரீயும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ம் தேதி தனது தாத்தா வீட்டுக்கு ஜெயஸ்ரீ சென்றிருந்தார். அன்று இரவு தனது கணவருடன் செல்போனில் பேசினார்.
மறு நாள் காலை ஜெயஸ்ரீ மீண்டும் போன் செய்தபோது நாராயணன் போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டுக்கு விரைந்தார் ஜெயஸ்ரீ. அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டு வாட்ச்மேனிடம் கேட்டபோது முதல் நாள் இரவே காரில் நாராயணன் வெளியில் சென்று விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் ஜெயஸ்ரீ. போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி நாராயணைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந் நிலையில் ஆந்திர மாநிலம் தடா என்ற இடத்தில் சாலையோரம் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக தகவல் வந்தது. அவரது சட்டை பையில் நாராயணனின் ஐடி கார்டு இருந்தது.
இதையடுத்து பிணத்தின் படத்தை ஜெயஸ்ரீயிடம் போலீஸார் காட்டியபோது அது தனது கணவர் தான் என்று கூறி கதறினார் ஜெயஸ்ரீ.
இதைத் தொடர்ந்து ஜெயஸ்ரீயை ேபாலீஸார் தடாவுக்கு அழைத்து செல்லவுள்ளனர்.
நாராயணன் கொலை செய்யப்பட்டது எதற்காக என்று தெரியவில்லை. அவரது கார் என்ன ஆனது என்றும் புரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications