கோவையில் ஆயுதப் போலீசார் குவிப்பு:சிறை பாதுகாப்புக்கு கமாண்டோ படை
கோவை:கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட இருப்பதால் கோவை மாநகருக்கு பல மாவட்டங்களில் இருந்தும் ஆயுதப் படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை சிறையின் பாதுகாப்புக்காக கமாண்டோ படையினர் விரைந்துள்ளனர்.
கடந்த 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர். சுமார் 250 பேர் படுகாயமடைந்தனர். சுமார் ரூ.18 கோடி ரூபாய் அளவிற்கு பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன.
இந்த குண்டு வெடிப்பில் 1ம் தேதி முதல் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அல் உம்மா பாஷா உள்பட 153 குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் கோவை மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, வேலூர், திருச்சி என தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் கமாண்டோ பயிற்சி பெற்ற காவலர்கள் கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மத்திய சிறைகளிலிருந்தும் தலா 10 கமாண்டோ படை வீரர்கள் கோவைக்கு விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கும் வரை கோவையில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நகர் முழுவதும் பாதுகாப்புக்கா அதிரடிப் படை போலீசாரும், ஆயுதப் படை போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications