கிருஷ்ணகிரியில் ரூ. 2300 கோடியில் ஜிஎம்ஆர்தொழில் மண்டலம்: 70,000 பேருக்கு வேலை!!
சென்னை:இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர், தமிழக அரசுடன் இணைந்து ரூ. 2,300 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக தொழில்துறை வளர்ச்சிக் கழகத் தலைவர் ராமசுந்தரமும், ஜிஎம்ஆர் நிறுவன இயக்குனர் நாகேஸ்வர ராவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த பொருளாதார மண்டலத்தில் பல்வேறு பொருட்களின் உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்படும். சுமார் 1,330 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பொருளாதார மண்டலம் மிகவும் பிற்பட்ட தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமையவிருக்கும் இந்த பொருளாதார மண்டலத்தில் முன்னணி மின்னணு, ஜவுளி, பொறியியல் துறை நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கவுள்ளன.
சுமார் ரூ. 11,000 கோடி அளவுக்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த பொருளாதார மண்டலம் உருவாக்கப்படவுள்ளது. 70,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் இந்த மண்டலத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் என ராவ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications